பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 216 宰 இராமலிங்க அடிகள் 8. அபராத மன்னிப்பு மாலை: அடிகளார் அப்பழுக் கற்ற ஞானியார் என்பதை நாம் அறிவோம். எனினும் நைச்சியாதுசந்தானமாக (தம்மையே தாழ்த்திக் கூறும் பாங்கில்) தாம் ஏதோ அறியாமையால் பிழைகள் புரிந்த மாதிரியும் அவற்றையெல்லாம் பொறுத்து மன்னித்த ருள வேண்டும் என்னும் போக்கிலும் பத்துப் பாடல்க ளைப் பாங்குடன் அருளுகின்றார். பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. நான்கு பாடல்களில் ஆழங்கால் படு வோம். செய்வகைநன் கறியாதே திருவருளே டூடிச் சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன் பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய் மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா ஐவகைய கடவுளரும் அத்தணரும் பரவ - ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தென் அரசே (1) கலைக்கடைநன்கறியாதே கனஅருளே டூடிக் கரிசுபுகன் றேன்கவலைக் கடற்புனைஎன்றுனரேன் புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி - தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரோன் றமர்த்தித் தனிப்பொருள்என் கையலளித்த தயவுடைய பெருமான் கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில் கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தருளும் குருவே (3) கையடைநன்கறியாதே கனஅருளே டூடிக் காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன் பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே