பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 零 21了 影 ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருநடஞ்செய் செம்பவள மலையே மெய்யுடியார் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே (7) தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளே டூடிச் சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன் போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே ஊர்ந்தபனக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான் சார்ந்தவரை எவ்வகையும் தாங்கிஅளிக் கின்ற தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே (9) அருமையான பாடல்கள். எந்தப் பிழையும் செய் யாத அடிகள் அனைத்துப் பிழைகளையும் செய்யும் நமக்காக அருளிய மாலை இது. நாம் இப்பாடல்களை இசையூட்டிக் கண்ணிர் தாரை தாரையாக ஒழுக உளங் கரைந்து ஒதினால் நம் பிழைகள் யாவற்றையும் இறை வன் மன்னித்து நம்மை உய்விப்பான் என்பது ஒரு தலை. சமயகுரவர் நால்வர் திருஞான சம்பந்தர் பிள்ளைப் பருவத்திலேயே இறைவியால் ஞானப் பாலூட்டப் பெற்று இறைவனுக் கும் இறைவிக்கும் பிள்ளையாயினமையால் பிள்ளை' எனப் பெயர் பெற்றார். திருநாவுக்கரசர் நாவுக்கரசரும் சொற்கோவும் ஆனபடியால் அவர் 'அரசு என வழங் கப் பெற்றார். சுந்தரமூர்த்திகள் நம்பி ஆரூரர் ஆவதால் அவர் நம்பி’ எனப் பெற்றார். மணிவாசகப் பெருமான் அமைச்சுச் செல்வத்தை அறவே நீத்துத் துறவுபூண்ட செம்மனத்தினராதலின் அடிகள் என்று வழங்கப் பெற் றார். இறைவனால் இவர்கள் ஆட்கொள்ளப் பெற்ற