பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 露 223 笨 விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி மேவியமெய்ப் பொருளைஉள்ளே விரும்பி வைத்துக் களங்கறுமெய் யன்பரெல்லாம் களிப்ப அன்றோ கற்றுணையால் கடல்கடந்து கரையிற் போர்ந்து துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத் துணையேநந் துரையேநற் சுகமே என்றும் வளங்கெழும்ஆ கமநெறியை வளர்க்க வந்த வள்ளலே நின்னருளை வழங்கு வாயே (8) அருள்வழங்கும் திலகவதி அம்மை யார்பின் அவதரித்த மணியே சொல் லரசே ஞானத் தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறியனேனை இருள்வழங்கும் உலகியல்தின் றெடுத்து ஞான இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும் வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றிதே (9) தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் துறும் செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம் தந்தபெருந் தகையே.எம் தந்தை யேஉன் கூர்த்தமதி நிறைவே.என் குருவே எங்கள் குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம் தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத . செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே (10) நாவுக்கரசின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி களடங்கிய பாடல்களை மனங்கரைந்து ஒதி அடிகள் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயல்வோமாக. மனம் இருந்தால் வழி பிறக்கும். 11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை: நம்பி ஆரூர் பற்றிய பத்துப் பாடல்கள் இம்மாலையில் அடங்கியுள் ளன. இவை யாவும் கொச்சக யாப்பில் அமைந்தவை.