பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 第 22了 鳞 12. ஆளுடைய அடிகள் அருள்மாலை: இந்த மாலை யின் பத்துப் பாடல்களும் தரவுக் கொச்சகக் கலிப்பா யாப்பில் அமைந்தவை. திருவாசகம் அடிகளின் வழிபடு நூல். திருவாசகத்தைத் தாம் அநுபவிக்க அருளவேண் டும் என மணிவாசகப் பெருமானிடமே அடிகள் வேண் டுவதை மாலையின் முதற்பாடலே அறிவிக்கின்றது. தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மாதவனே மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின் ஆசகன்ற அநுபவம்நன் அநுபவிக்க அருளுதியே (1) இந்த வையகத்தில் எலும்புருவாக இளைத்து நெடுங்காலம் தவம் புரிந்தவர் அடைய முடியாத நிலையை மணிவாசகப் பெருமான் அடைந்த முறையை வியந்து போற்றுவதை, மன்புருவ நடுமுதலா மனம்புதைந்து நெடுங்காலம் என்புருவாய் தவம்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர் இன்புருவம் ஆயினைநீ எழில்வாத ஆர்இறையே (3) என்ற பாடலால் அறியலாம். சுத்ததேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என மூவகை உடம்புகளை அடிகள் கூறுவர். இம்மூன்றுமே இங்கு அன்புருவம், அருளுருவம், இன்புருவம் எனக் கூறப் பெற்றன. அன்புருவம், அருளுருவம், இன்புருவம் என்ற வரிசை