பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 霹 229 攀 தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய் ஆடுகின்ற சேவடிக்கிழ் ஆடுகின்ற ஆரமுதே நாடுகின்ற வாதஆர் நாயகனே நாயடியேன் வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருகால் மாற்றுதியே (5) என்ற பாடலில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். சிற்சபையில் இறைவன் செய்யும் திருக்கூத்து சின் மயமானது என அருளியது உளங்கொள்ளப்படும். 'ஆடுகின்ற சேவடிக் கீழ் ஆடுகின்ற ஆரமுதே' என்று பெருமானை அடிகள் குறிப்பிடுவது நயஞ் செறிந்தது. ஆடலரசனின் இடப்புறத்தில் சிவகாமி அம்மையும் வலப்புறத்தில் தூக்கிய திருவடியின்கீழ் கூப்பிய கையு டன் பெருமானும் இருப்பது கண்கொள்ளாக் காட்சி. இதனால்தான் ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆர முதே' என்று அடிகள் அருளியுள்ளது உணரப்படும். ஆடலரசரோடு உடனிருக்கும் பாங்கு வாசகப் பெருமா னுக்கே உரிய தனிச்சிறப்பாகும். திருவாசகத்தை உன்னுந்தோறும் பெறும் உலப் பிலா இன்பம் காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற கற்புடையாள் ஒருத்தி எய்தும் இன்பத்தை விட மிக்கது என்று அடிகள் அருளுவதை, சேமமிகும் திருவாத ஆர்த்தேவென்றுலகுபுகழ் மாமணியே நீயுரைத்த வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காலதன்தன் கலவிதனைக் கருதுகின்ற