பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 23C 笨 இராமலிங்க அடிகள் ஏமமிகு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே (6) என்ற பாடலில் காணலாம். இந்த அருளிச் செயல் திருவாசகத்தின்மீது அடிகள் கொண்டிருக்கும் அளவற்ற காதலைக் காட்டும். திருவாசகத்தை உள்ளம் உருகிப் பாடுங்கால் ஒரு வர் பெறும் அநுபவம் எத்தகையது என்பதை அடிகள், வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே (7) என்ற பாடலில் விளக்கம் தருகின்றார். இவ்விடத்தில் 'தனித்தனி முக்கணிபிழிந்து (6. அருள்விளக்க மாலை - 17) என்ற பாடலை நினைந்து பாடிச் சுவைத்தால் அதன் சுவையே அலாதியானது என்பது தெரியும். திருவாசகத்தில் 'ஒரு மொழியே போதும் - அதுவே தன்னையும் தன்னை உடையானையும் ஒன்றுவிக்கும் பெற்றி வாய்ந்தது - என்பதை, வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே (8) என்ற பாடலில் போற்றுவதைத் தெளியலாம்.