பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 岑 237 宗 இருந்ததிசை சொலஅறியேன் எங்கனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந்திலனே (1) கற்குமுறை கற்றறியேன் கற்பனைகற் றறிந்த கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன் நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன் சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும் திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனே இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ங்னம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந்திலனே (3) சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன் சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன் ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல் ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன் நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில் நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ ஏதிலர்சார் உலகினிடை எங்ங்னம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந்திலனே (8) வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன் திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன் உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றத் தனிலே ஒருமைநடம் புரிகின்றார் பெருமை,அறி வேனோ இசையுறுபொய் உலகினிடை எங்ங்ணம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே (10) பாடல்களைப் பன்முறை உணர்ந்து படித்தால் நம் ஏக்கத்தை இறைவனும் உணர்ந்து நமக்கு வழிகாட்டு வான் என நம்புவோமாக.