பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 24C 举 இராமலிங்க அடிகள் தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே சிலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவம்செய்வான் போலே ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்,இந் நாய்வயிற் றினுக்கே காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய் (1) சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுதல் தவம்எலாம் சுருங்கி ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுமையில் பொருந்திய காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய் (2) இரண்டாம் பாடலில் அடிகளாரின் வாழ்க்கைக் குறிப்பு நிழலிடுகின்றது. சோற்றிலே ஒருவனுக்கு விருப் பம் உண்டானால் அவனுடைய தவம் எல்லாம் ஆற் றிலே கரைத்த புளியைப் போலாகும் என்பது அடிகளா ரின் குறிப்பு. அடிகள் சோற்றாசையற்றவர். மரக்கறி உணவையே கொள்பவர். ஒருவேளை உண்ட காலத்து உச்சிப் போதிலும் இருபோது உண்ட காலத்து உச்சிப் போதும் இரவு முன்னேரமும் ஆகும். வெந்நீரையே அருந்துவர்; தண்ணிர் அருந்தார். உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக் கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை