பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 苓 243 案 2. மன்னும்.அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே (7): அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப் பிறிவிலா தென்னுட் கலந்தநீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன் எறிவிலாச் சுவைவே றெவற்றிலும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய் (8): பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பனங்களைப் பலகால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே (11) சரியைஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும் புரியவும் பதங்கள் பொருந்தவும். எனது புந்தியில் ஆசைசற் றறியேன் பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றின்ே முத்திபெற்றிடவும் உரியதோர். இச்சை எனக்கில்லை என்றன் உகிரம்நீ அறிந்ததே எந்தாய் (14) பெருமானுக்குத் திருமணம் ஆயிற்று. துணைவியாருடன் தொடர்பு இல்லை. மாதரை வெறுத்த தாயுமான அடிகட்கும் திருமணமாயிற்று. ஒரு மகனையும் பெற்றார். பின்னர் மனைவியைத் துறந்தார். அருந்தலில் தமக்குள்ள வெறுப்பைப் பிள்ளைப் பெரு விண்ணப்பத்தில் (29,30,31) விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.