பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 密 9 影 பனித்தனன் நினைத்த தோறும்.உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய். - . - பிள்ளைப் பெரு - 43 என்பது இதற்கு அகச்சான்றாக அமைகின்றது. - (5) பலருக்குப் பாடஞ் சொன்னதும், சிறுவர்க்குக் கல்வி பயிற்றியதும் இந்த வாழ்க்கையின்போதுதான். (6) இந்தக் காலத்தில்தான் ஒழிவிலொடுக்கம், தொண்டை மண்டல சதகம், சின்மய தீபிகை என்ற மூன்று நூல்களையும் பதிப்பித்த செயல்கள் நடைபெற்றன. (7) நிட்டாநுபூதி உரைக்குச் சாற்றுகவி அருளிய தும் (1851) சிதம்பர புரானப் பதிப்புக்குச் சாற்றுகவி அளித்தும் (1855) வேதநாயகம் பிள்ளை நீதிநூலுக்குச் சாற்றுகவி அளித்து (1859) 'மனுமுறை வாசகம்’ என்ற நூலை இயற்றியதும் (1854) ஒற்றியூர் வாழ்க்கையின் போதுதான். (8) சென்னையில் சில அற்புத நிகழ்ச்சிகள்: ,{} ஒருநாள் அடிகள் வியாசர்பாடிக்குச் சென்று திரும்பியபோது அரவு ஒன்று குறுக்கிட்டது. உடனி ருந்த அனைவரும் அஞ்சியோட, அடிகள் அசையாது நிற்க, அரவு அவரது காலைச் சுற்றிக் கொண்டது. அடிகள் அதனை ஏகும்படி ஏவ, அது ஊறு செய்யாது அகன்றது. அனைவருக்கும் ஒரே வியப்பு. (ii) பலவாண்டுகளாக வாதநோயால் வருந்திய ஒரு வர், அடிகளிடம் தம் துன்பத்தை விண்ணப்பித்துக் கொள்ள, அடிகள் திருநீறு அளிக்க, அதன் மகிமையால் நோய் குணமாயிற்று. (ii) கந்தசாமி முதலியார் என்பார் தமது வறிய நிலையை அடிகளாரிடம் கூறி தாம் செல்வரை அணுகிப் பொருளுதவி பெறுவதற்கு ஏதுவாக அறிமுகச் சீட்டுத் தந்தருளுமாறு வேண்ட, அடிகள் நகைத்து,