பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 家 253 影 நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும் மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே (132) அனைத்தும் உள்ளத்தை உருக்கி அடிகளின் வாழ்க் கைக் குறிப்புகளைக் கோடிட்டுக் காட்டுவன. 23. சற்குருமணி மாலை: இப்பகுதியில் 25 பாடல் கள் அடக்கம். நடராசப் பெருமானைத் தம் குருவாகக் கருதி அருளியவை. அனைத்தும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலாகியவை. பாடல்கள் யாவும் 'தனி நடராசஎன் சற்குரு மணியே என்று இறுகின்றன. மாற்றறியாதசெ மும்பசும் பொன்னே மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக் கோயில் இருந்த குணப்பெருங் குன்றே வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய் தனிநட ராசஎன் சற்குரு மணியே (1) காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே தனிநட ராசஎன் சற்குரு மணியே (4) தத்துவ மசிநிலை இது.இது தானே சத்தியம் காண்எனத் தனித்துரைத் தென்க்கே எத்துவந்தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்