பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 256 等 இராமலிங்க அடிகள் வருதாகந் தவிர்த்திட வந்ததென் அமுதே மாணிக்க மலைநடு மருவிய பரமே தருதான முனவெனச் சாற்றிய பதியே தனிநடராசஎன் சற்குரு மணியே (24) பாடல்கள் அனைத்தையும் உளங்கரைந்து பாடி னால் வள்ளல் பெருமானின் அநுபவத்தைப் பெறலாம். 25. திருமுன் விண்ணப்பம்: தில்லைச் சிற்றம்பவன் திருவடிகளைப் பணிந்து இப்பிறப்பில் ஏற்பட்ட உடல் அழிவுறா வண்ணம் காக்குமாறு வேண்டுவது இப்பதி கம். அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தத்தாலான பத்துப் பாடல்களைக் கொண்டது. பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய் சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே (2) இலங்கு பொன்னனிப் பொதுநடம் புரிகின்ற இறைவ.இவ் வுலகெல்லாம் துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல் கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் அலங்கும் இவ்வுடல் இம்மையே - அழிவுறா அருள்உடல் உறும்ஆறே (5) மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற பேற்றில் ஆருயிர்க் கின்பருள். இறைவதின் பெய்கழற் கணிமாலை