பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缘 253 象 இராமலிங்க அடிகள் துங்கம்.உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே (9) என்பன இவற்றின் மூன்று பாடல்கள். 27. திருஅருள் விழைதல்: இருபது எழுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்தங்களைக் கொண்ட இப்பகுதி, அடிகள் இறைவனது திருஅருளை விழைதலை விளக்கு துெ. . - உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன் உடல்பொருள் ஆவியும் உனக்கே பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த பின்னும்நான் தளருதல் அழகோ என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன் என்செய்வேன் யார்துணை என்பேன் முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி முறிதல்ஒர் கணம்தரி யேனே. (3) தான்.எனைப் புனரும் தருணம் தெனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே தேன்.உறக் கருதி இருக்கின்றேன். இதுநின் திருவுளம் தெரிந்ததெந் தாயே ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும் அரைக்கனம் ஆயினும் தாழ்க்கில் நான் இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே நடம்புரி ஞானநாயகனே (5) தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும்நீ என்றே சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன். இதுநின் திருவுளம் தெரிந்ததே எந்தாய்