பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் நிந்தைசெய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின்அருட் கழகோ (8) பழம்பிழி மதுரப் பாட்டல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக் கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய் வழங்குநின் புகழே பாடுறு கின்றேன் மற்றொரு பற்றும்இங் கறியேன் சழக்குடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும்நீ அலையோ (10) போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும் குதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும் தூயர்கள் மனம்.அது துளங்கித் தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ தனி.அருட் சோதியால் அந்த வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம் வழங்குவித் தருளுக விரைந்தே (15) சிவந்திகழ் கருனைத் திரு நெறிச் சார்பும் தெய்வம்என் றேஎனும் திறமும் நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும் நன்மையும் நரைதிரை முதலாம் துவந்துவம் தவிர்த்துச் சுத்தமாதியமுச் சுகவடி வம்பெறும் பேறும் தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ தந்தருள் தருணம்ஈ தெனக்கே (17) தருணம்.இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் தனிநெறி உலகெலாம் தழைப்பக் கருணையும் சிவமே பொருள்ளனக் கருதும் கருத்தும்.உற் றெம்மனோர் களிப்பப்