பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

永 268 棠 இராமலிங்க அடிகள் அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவாறறிந்தே களித்திருக் கின்றேன் விடுதியோ விட்டிடு வாயேல் உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ உன்னருள் அடையநான் இங்கே படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் பாடெலாம் நீஅறி. வாயோ (5) என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல் ஏற்றினை யாவரும் வியப்பப் பொன்இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர் உவகையும் உதவினை எனக்கே தன்னிகர் இல்லாத் தலைவனே நினது தயவைஎன் என்று.சாற் றுவனே (8) சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது துயநல் உடம்பினில் புகுந்தேம் இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புறக் கலந்தனம் அழியாப் பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப் பரிசுபெற் றிடுகபொற் சபையும் சிதந்தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்கநின் சிரே (10) இந்த ஐந்து பாடல்களையும் ஐயமின்றி அசை போட்டுப் பாடினால் அடிகளார் பெற்றபேறு நம்முடை யதாய் ஆகும் நிலை ஏற்படும். - 39. பொதுநடம் புரிகின்ற பொருள்: இருபது பாடல்க ளைக் கொண்ட இப்பகுதி எழுசீர்க் கழிநெடிலடி ஆசி ரிய விருத்த யாப்பில் அமைந்தது. தில்லைவாழ் நடரா சப் பெருமான் தமக்குச் செய்தருளியவற்றையெல்லாம்