பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 球 269 苓 நினைந்து போற்றும் வண்ணம் அடிகளார் நினைவு கூர்ந்து மகிழ்வது. பாடல்கள் யாவும் பொதுநடம் புரிகின்ற பொருளே என இறுவன. அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம் அளித்தெனை வளர்த்திட அருளம் தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்தியச் சிவமே இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றலைமேல் ஏற்றிய இன்பமே எல்லாப் பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே பொதுநடம் புரிகின்ற பொருளே (1) தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர் தமக்குளே சார்ந்தநற் சார்பே பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் பெறல்அரி தாகிய பேறே புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து பொதுநடம் புரிகின்ற பொருளே (கி) தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம் தரவல்ல சம்புவே சமயப் புன்மைநீத்தகமும் புறமும் தமைந்த புண்ணியர் தண்ணிய புகலே வன்மைசேர் மனத்தை தன்மைசேர் மனமா வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப் பொதுநடம் புரிகின்ற பொருளே (11) சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வருள் நெறியே