பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼 272 零 இராமலிங்க அடிகள் சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ் செல்வமே என்பெருஞ் சிறப்பே நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறைஒளி வழங்கும்ஒர் ஒளியே ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத் திருந்தர சளிக்கின்ற பதியே பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே (4) மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் மெய்யறி வானந்த விளக்கே கால்வளர் கனலே கனல்வளர் கதிரே கதிர்நடு வளர்கின்ற கலையே ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப் பால்அர சாள்கின்ற அரசே - பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே (6) வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் மாபெருங் கருணைஎம் பதியே ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா உலகமும் நிறைந்தபேர் ஒளியே மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால் வயங்கும்.ஓர் வெளிநடு மணியே பான்மையிற் றுளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே (9) இந்த நான்குப் பாடல்களையும் நயம்பெற ஓதி நற்பயன் பெற முயல்வோமாக. 43. திருவடி நிலை: இந்த நிலை பத்துப் பாடல் களில் பகரப் பெறுகின்றது. பாடல்கள் யாவும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. திருவடியை திருவடி நிழல் என்று சொல்லப் பெறும். வெயிலில் நடந்து வரும் மனிதன் மரத்தின் நிழலில்