பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் ః 273 : ஒதுங்கி நின்று ஆறுதல் அடைதல்போல இவ்வுலகில் சம்சார வெப்பத்தில் உழலும் சேதநர்கள் இறைவன் திருவடி நிழலில் ஒதுங்கி அவ்வெப்பத்தைத் தணிவித் துக் கொள்வதாகக் கூறுவது சமய சாத்திரங்களின் மரபு. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் உவப்பிலா அண்டத்தின் பகுதி அலகுகாண் பரிய பெரியகூட் டத்த அவையெலாம் புறத்திறைச் சார்பில் விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் றிருந்தென விருந்தன மிடைந்தே இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் தென்பர்வான் திருவடி நிலையே (1) நடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர்பரா சக்தி நவில்பர சிவம்எனும் இவர்கள் இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின் கடையுறு துகள்என்றறிந்தனன் அதன்மேற் கண்டனன் திருவடி நிலையே (2) இகந்துழல் பகுதித் தேவர்.இந் திரன்மால் பிரமன் சானனே முதலாம் மகத்துழல் சமய வானவர் மன்றின் மலரடிப் பாதுகைப் புறத்தும் புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்என்றறிந்தனன் அதன்மேல் செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன் திருவடி நிலையே (4) பேசும்.ஒங் காரம் ஈறதாப் பேசாப் பெரியஒங் காரமே முதலா . ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம் என்றவற்றவண்அவண் இசைந்த இராம.-19