பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 案 277 篆 ஏயானைத் துரியநடு விருக்கின் றானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (8) உடையானை அருட்சோதி உருவி னானை ஒவானை மூவானை உலவா இன்பக் கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு கொண்டானைக் கொல்லாமை குறித்திட் டாரை அடையானைத் திருச்சிற்றம் பலத்தி னானை அடியேனுக் கருளமுதம் அளிக்க வேயின் இடையானை என்னாசை எல்லாம் தந்த எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (10) இந்த ஐந்து பாடல்களையும் அகத்தில் இருத்தி உளங்கரைந்து ஒதினால் திருச்சிற்றம்பலத்தான் கண் கொள்ளாக் காட்சி தருவான் என்பது உறுதி. 46. இறை திருக்காட்சி: முப்பது திருப்பாடல் களைக் கொண்ட இப்பகுதியும் இறைக் காட்சியை இயம்புவது. பாடல்களனைத்தும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. பாடல்கள் யாவும் 'கண்டு கொண்டேனே' என்று முடிபவை. இதுவும் மேற்குறிப்பிட்ட இரண்டு பதிகங்களும் ஒரே கருத்தை வேறுபடக் கூறுவனவாகும். அருளெலாம் அளித்த அம்பத் தமுதை அருட்பெருஞ் சோதியை அரசை மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியைப் பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத் தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான தீபத்தைக் கண்டுகொண் டேனே (1) சிதத்திலே ஊறித் தெளிந்ததெள் அமுதைச் சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்