பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 2了8 岑 இராமலிங்க அடிகள் பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப் பரம்பர வாழ்வைஎம் பதியை மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தைமா மந்திரந் தன்னை . இதத்திலே என்னை இருத்தி.ஆட் கொண்ட இறைவனைக் கண்டுகொண் டேனே. (3) (சிதம் - ஞானம்) . பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய் பதியுமாம் ஒருபக பதியை நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி நல்கிய கருனைநாயகனை எண்ணிய படியே எனக்கருள் புரிந்த இறைவனை மறைமுடி இலங்கும் தண்ணிய விளக்கைத் தன்னிகர் இல்லாத் தந்தையைக் கண்டுகொண் டேனே (6) ஆதியை ஆதி அந்தமீ தெனஉள் அறிவித்த அறிவைஎன் அன்பைச் சோதியை எனது துணையை என் சுகத்தைச் சுத்தசன் மார்க்கத்தின் துணியை நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்தமா நிதியை ஒதியை ஒதா துணர்த்திய வெளியை ஒளிதனைக் கண்டுகொண் டேனே (8) கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக் கருதுகோற் றேன்.நறுஞ் சுவையை அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை ஆவியை ஆவியுட் கலந்த பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப் பேசுதற் கரும்பெரும் பேற்றை விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும் விளக்கினைக் கண்டுகொண் டேனே (14)