பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 缘 281 零 இறைஅளவும் தூசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அநுபவங்கள் எவைக்கும்முதல் இடமாய் மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த நிறையருட்சி அடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் நினைத்தளலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந்தனையே (5) பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும் உற்றறிதற் கரியஒரு பெருவெளிமேல் வெளியில் ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள் பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவிதுழைந் தனையே (9) . இந்த நான்கு பாடல்களையும் நன்கு படித்து உளங் கரைந்தால் நமது மனக்குடிசையிலும் இறைவன் வந்து புகுந்தருள்வான் என்பது உறுதி. 50. ஆண்டருளிய அருமையை வியத்தல்: பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் எழுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தது. தம்மை இறைவன் ஆண்டு கொண்டருளிய அருமைப் பாட்டை வியந்து போற்றும்படியாய்த் திகழ்வது. - அம்பலத் தாடும் அமுதமே என்கோ அடியனேன் ஆருயிர் என்கோ எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ என்னிரு கண்மணி என்கோ நம்பிடில் அணைக்கும் நற்றுனை என்கோ நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ இம்பர்.இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி என்னைஆண் டருளிய நினையே (1)