பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塞 12 凌 இராமலிங்க அடிகள் (11) பல தலங்களின் வழிபாடு: அடிகள் சென்னை யில் வாழ்ந்த காலத்தில் பல தலங்களை வழிபட்டனர். (அ) திருவலிதாயம் செங்கல்பட்டு மாவட்டத்தில், சைதாப்பேட்டை வட்டத்தில் உள்ள தலம். இறைவன் - வலிதாய நாதர், இறைவி தாயம்மை. இறைவன்மீது கந்தைத் துணி சுற்றியிருந்ததைக் கண்டு அடிகள் நெஞ் சம் உருகுகின்றார். பாடல்தோறும் இந்த உருக்கத்தைக் காணலாம். ஒரு பாடல் தருவோம். சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே எந்தை யே.எமை ஆட்கொண்ட தெய்வமே தந்தை யேவலி தாயத்த லைவநீ கந்தை சுற்றும்க கணக்கது என்கொலோ 2 - இரண்திரு.காட்சிப் பெருமிதம் بی سیم . கந்தைச் சுற்றிய இரக்கக் காட்சியை நுவலும் இப்பதிகம் 'காட்சிப் பெருமிதம் எனத் திருநாமம் பெற்றுள்ளது. (ஆ) திருமுல்லைவாயில் . இது தொண்டை நாட் டில் செங்கற்பட்டு மாவட்டத்தில் சைதை வட்டத்தில் உள்ளது. இது வட முல்லைவாயில், இறைவன் - மாசிலாமணி, இறைவி கொடியிடைநாயகி. மாசிலாமணி யின் மீது இரண்டு பதிகங்கள் அருளியுள்ளனர் அடிகள் {2-9,10 பதிகங்கள்) (இ) திருஎவ்வுள். மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் பெருமக்களாலே மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்விய தேசங்களுள் ஒன்று: 1. இப்பெயரில் இரண்டு தலங்கள். ஒன்று சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இது தென் முல்லைவாயில், மற்றொன்று இது.