பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笨 286 举 இராமலிங்க அடிகள் மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன் தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே (11) தலத்தின் பெருமையைப் பேசும் இவ்வைந்து பாடல்களில் ஆழங்கால் பட்டு அநுபவிப்போம். 55. ஆன்ம தரிசனம்: பத்துப் பாடல்கள் அடங்கியது இப்பதிகம். பாடல்கள் யாவும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. முன் பதிகத் தில் தலத்தைப் பற்றிப் பேசிய அடிகள், தலத்தில் ஆடல் புரியும் அம்பலவன் தரிசனம்பற்றிப் பேசுகின்றார் இப் பதிகத்தில். பாடல்கள் யாவும் அடிக்கடி உரைப்பதென் நினக்கே என இறுகின்றன. இவற்றில் ஐந்து A sti-Goos: திருஎலாம் தரும்ஒர் தெய்வமாம் ஒருவன் திருச்சிற்றம் பலந்திகழ் நின்றான் உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி உளஎலாம் ஆங்கவன் தனக்கே தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு செயலிலேன் எனநினைந் திருந்தேன் அருளலாம் உடையாய் நீஅறிந்ததுவே அடிக்கடி உரைப்பதென் நினக்கே (1) நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்புற நின்றபோ தெல்லாம் - எனைத்தனி ஆக்கி நின்கனே நின்றேன் என்செயல் என்னஓர் செயலும் தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன்செய லாம்எனப் புரிந்தேன் அனைத்தும்என் அரசே நீஅறிந்ததுவே அடிக்கடி உரைப்பதென் நினக்கே (2)