பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 岑 287 涂 களித்தபோ தெல்லாம நின்இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள்.நீர் ததும்பித் துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைந்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே தெளித்தனன் செய்கைவே றறியேன் ஒளித்திரு உளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே (3) களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான்களித் தறியேன் உளவிலே உவந்த போதும்நீ தானே உவந்தனை நான்உவந் தறியேன் கொளஇலே சமும்ஒர் குறிப்பிலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பதென் நினக்கே (5) பித்தெலாம் உடைய உலகர்தம் கலகப் பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க சங்கம்என் றோங்குமோ தலைமைச் சித்தெலாம் வல்ல சித்தன்என்றுறுமோ தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன் ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த துரைப்பதென் அடிக்கடி உனக்கே (8) இந்த ஐந்து பாடல்களையும் உளங்கரைந்து ஒதி அடிகளாரின் அநுபவத்தை ஒரளவு பெற முயல்வோம். 56. சுத்தசன்மார்க்க வேண்டுகோள்: சுத்த சன்மார்க் கத்தைக் கண்டு நிறுவியவர் அடிகள். அதனை நடை முறைப் படுத்தத் துணைபுரியுமாறு அருட்பெருஞ் சோதியை வேண்டுகின்றார். பதினொரு பாடல்களை யுடைய இப்பதிகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய