பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 29C 零 இராமலிங்க அடிகள் ஆடையிலே எனைமணந்த மணவாள பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கள்அணிந் தருளே (2)" அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும் கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும் காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க விண்டகுபேர் அருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே விளங்குஒரு பெருங்கருணை கொடிநாட்டி அருளாம் தண்டகும்ஒர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும் தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே (9) உண்னஉண்ணத் தெவிட்டாத தித்தித்தென் உடம்போ டுயிர்உணர்வும் கலந்துகலந்துள்ளகத்தும் புறத்தும் தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி எண்ணியான் எண்ணம்எலாம் எய்தஒளி வழங்கி இலங்குகின்ற பேர்அருளாம் இன்னமுதத் திரளே புண்ணியமே என்பெரிய பொருளே.என் அரசே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே (13) தனித்தனிமுக் கணிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தறுந் தேன்பெய்து பசும்பாலும்ந் தேங்கின் தனிப்பாலும் சேர்ந்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுதெள் அமுதே அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே (17)" 9. இப்பாடல் அடங்கிய கொடுமுடி சுந்தராம்பாள் பாடிய இசைத்தட்டு மிகு புகழ் வாய்ந்தது. சிறு வயதில் இதனைக் கேட்டு உள்ளம் பறிகொடுத்த நில்ை நின்ைவிற்கு வருகின்றது. 10. தாரைக்குடியில் பணியாற்றியபோது (1950-50) ஓர் அன்பர் இப்படி ஒரு பொருள் செய்யப்படுமானால், அது வாயில் வைக்க முடியாதே என்று கிண்டல் செய்தார். இது சமையல் குறிப்பில்லையே' என்று மறுமொழி சொன்னேன். அடிகள் கற்பனையில் ஒரு சுவையை உண்டாக்கி அச்சுவை இறைவனாகிய அமுதின் சுவைக்கு ஈட்ாகாது என்று குறிப்பிட்டார். வள்ளல் பெருமானுடன் அநுபவிக்க முடியாதவர்க்கு இது சுவைக் கேடாகத்தான் தோன்றும். காமாலை நோயாளர்க்கு பர்தாம் அல்வா எப்படி இனிக்க முடியும்?