பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 密 291 苓 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும் ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் தேகமும் உள் உயிர்உணர்வும் தித்திக்கும சுவையே வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் வயங்குநடத் தரசேனன் மாலையும் ஏற் றருளே (22) எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே சுட்டிரண்டும் காட்டாதே துரியநிலை நடுவே சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே மட்டிதுஎன்றறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம்.உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே தாழ்மெழிஎன் றிகழாதே தரித்துமகிழ் தருளே (22) சாதிகுலம் சமயம்எலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகிர் அண்டம் ஆருயிர்கள் அகம்புறமற் றனைத்தும்நிறை ஒளியே ஒதிஉணர்ந்தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஒதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் தூயநடத் தரசேனன் சொல்லும்அணிந் தருளே (23) பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅனைத் தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே மெய்ம்மைஅறி. வானந்தம் விளங்கும்அருள் அமுதே தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும் தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே (26)