பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 1 i. 292 案 இராமலிங்க அடிகள் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே கானார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுகின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அருசே யான்புகலும் இசையும்அணிந் தருளே (39) தாய்முதலோ ரொடுஞ்சிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதுக்கத் தரிசித்த போது வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியன் மெய்உறவாம் பொருளே காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே தூய்வகையோர் .ோற்றமணி மன்றில்நடம் புரியும் சோதிநடத் தரசேஎன் சொல்லும் அணிந்தருளே (44)" நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி நல்உணவு கொடுத்தென்னை செல்வம்.உற வளர்த்தே ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே ஒள்ளியதெள் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே தேன்.பரித்த மலர்மனமே திருப்பொதுவில் ஞானத் திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே (49) மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும் பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அது பவிக்கப் பட்டஅது பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த ஐந்து மாதக் குழந்தைக்கு சிதம்பர ரகசியம் வெளிப்படையாகக் காட்டப் பெற்றது. இந்நூல் பக்.2. காண்க.