பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 寮 295 举 82. அருட்பெருஞ்சோதி அட்டகம் அருட்பெருஞ் சோதி என்பதை விளக்கும் பாங்கில் எட்டுப் பாடல் கள். இவை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்க ளால் இயன்றவை. அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் அருட்பெருந் திருவிலே அமர்ந்த அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே அருட்பெருஞ் சித்திஎன் அமுதே அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே அருட்பெருஞ் சோதிஎன் அரசே (1) கண்முதல் பொறியால் மனமுதல் கரணக் கருவினால் பகுதியின் கருவால் எண்முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும்ஒர் பரம்பர உணர்வால் விண்முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவ தரிதென உணர்ந்தோர் அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே (3) ஏகமோ அன்றி அநேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்னோ திகழ்ந்திடும் ஆனதோ அதுவோ யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர் ஆகமோ டுரைத்து வழுத்திநின் றோங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே (6) எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது.அது எனஉரைப் பரிதாய்த் தங்கும்ஒர் இயற்கைத் தனிஅது பவத்தைத் தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்