பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 器 297 等 மருந்திது மணி.இது மந்திரம் இதுசெய் வகை.இது துறை.இது வழிஇது எனவே இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமுதளித்தே என்னையும் தன்னையும் ஏகம் பொருந்தின் லாஞ்செய வல்லஓர் சித்திப் புண்ணிய வாழ்க்கையில் நண்ணியே காந்த அருந்தவ வீதியில் ஆடல்செய் தீரே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே (7) இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத் தெருட்சாரும் சுத்தசன் மார்க்கநன் னிதி சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும் அருட்சோதி வீதியில் ஆடல்செய் திரே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே (10) இந்த நான்கு பாடல்களையும் மனம் கரைந்து பாடி னால் அவை நம்மையும் சிவானந்தத்தில் அழுந்துவிக்கச் செய்யும். - 87. அச்சோ பத்து: இத்தகைய 'பத்துகள் மணிவாச கர் பாடல்களிலும், பெரியாழ்வார் பாசுரங்களிலும் காணலாம். அச்சோ என்ற சொல் அதிசயத்தைக் குறிக் கும் இடைச்சொல். திருவருளில் சேர்த்துக் கொண்டதை வாய்விட்டுச் சொல்ல முடியாத அநுபவத்ததிசயம் என் பதைச் சுட்டுவது. இப்பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது. அனைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசி ரிய விருத்த யாப்பில் அமைந்தவை. . - கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப் பெருங்கருணைக் கடலை வேதத் திருத்தனைஎன் சிவபதியைத் திங்கனியை தெள்ளமுதத் தெளிவை வானில் -