பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ඝණුද 360 % இராமலிங்க அடிகள் வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர் ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய் வாழிமற் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே (12) இப்பாடல்களை உளம் உருகிப் பாடி அநுபவித் தால் அடிகள் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயலலாம். 93. சிவபுண்ணியப் பேறு: தமக்குச் சிவபுண்ணியப் பேறு வாய்த்ததை எண்ணி எண்ணி மனநிறைவு கொள் ளுகின்றார் அடிகள் இப்பதிகத்தில். இதில் பத்துப் பாடல்கள் அடக்கம். அவை அனைத்தும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இவற்றில் ஐந்து பாடல்களில் ஆழங்கால் படுவோம். மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலஞ்சார் தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது காலிலே ஆசை வைத்தனன் நீயும் கனவிலும் நனவினும் எனைதின் பாலிலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித்ததுவே (1) கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நான நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும் நீங்கிடா திருந்துநீ என்னோடு ஆடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற் றறிவுரு வாகிநான் உனையே