பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் ※ 30± 零 பாடவும் பெற்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே (4) நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி நாதனை என்உளே கண்டு கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிடக் குலவிஇன் புருவாய் ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான் அம்பலம் தன்னையே குறித்துப் பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே (6) புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம் புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம் துலங்கவும் திருவருட் சோதிப் பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே (8) கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் சட்டமும் கிழித்தேன் துககமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வமெய்ப் பிள்ளை.என் றொருபேர்ப் பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே (10) பாடல்களைப் பரிவுடனும் பாசத்துடனும் பாடி அநுபவித்தால் வள்ளல் பெருமான் பெற்ற மனநிறைவு நமக்கும் கிட்டும் என்பது உறுதி. பாடல்கள் யாவும் 'பண்ணிய தவம் பலித்ததுவே என்று முடியும் பாங் கும் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.