பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篱 茎4 笨 இராமலிங்க அடிகள் (ஈ) புள்ளிருக்கு வேளுர்": இப்போது வழங்கி வரும் பெயர் வைத்தீசுவரன் கோயில் என்பது. இது தஞ்சை மாவட்டத்தில் சீகாழி வட்டத்தில் உள்ளது. புள்ளிருக்கு வேளுர்ப் பிரானை அடிகள் இரண்டு பதிகங்களாலும் ஒரு மாலையாலும் ஒரு கீர்த்தனையாலும் போற்றியுள் ளார்கள். அவை சிகாமணிமாலை', 'பிரசாதப் பதிகம்’, 'வைத்தியநாதர் பதிகம் முதலியன. சிகாமணி மாலை யும், பிரசாதப் பதிகமும் இரண்டாம் திருமுறையிலும், வைத்தியநாதர் பதிகம் ஆறாம் திருமுறைத் தனிப் பாடல் களுடனும் இடம் பெற்றுள்ளன. இரு வெண்பாக்கள் ஐந்தாம் திருமுறையில் உள்ளன. ; , (உ) திருவாரூர். இது பாடல் பெற்ற சிவத்தலங்கள் 275இல் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றா லும் சிறந்தது. இறைவன் - வன்மீக நாதர் (புற்றிடம் கொண்ட பெருமான்); இறைவி - அல்லியங் கோதை. காஞ்சியும் திருவாரூரும் ஐம்பூதத்தலங்களுள் (பிரு திவி) தலம். ஆறாதாரத் தலங்களுள் இது மூலாதாரத் தலம். இத்திருத்தலப் பெருமானை அடிகள் விண்ணப் பப் பதிகம்’ ஒன்றால் வழிபட்டுள்ளார்கள். இது மூன் றாம் திருமுறையில் 'திருவாரூர்ப் பதிகம் என்ற பெயரு டன் திகழ்கின்றது. இதில் ஒரு பாடல்: எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய வந்தாய் அந்தோ கடைநாயேன் . மறந்து விடுத்தேன் மதிகெட்டேன். 3. புள் (சடாயு, சம்பாதி), இருக்கு (வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய நான்கும் வழிபட்டமையால் புள்ளிருக்கு வேளுர் எனப் பெயர் பெற்றது. இறைவன் - வைத்தியநாதன், இற்ைவி - தையல் நாயகி, முருகப் பெருமான் - முத்துக்குமாரன் அடியார்களின் உடற் பிணியையும் உள்ளப் பிணியையும் தீர்ப்பதனால் இறைவன் வைத்தியநாதன் எனப்பட்டான்.