பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 录 309 零 பில் (முதலாயிரம் - தொண்டரடிப் பொடிகளின் பாசுரங் கள் காண்க) பாடியுள்ளார். இந்த இரண்டு அருளாளர்க ளின் - அருளிச் செயல்களில் ஈடுபட்ட பாரதியார் 'பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி என்ற தலைப்பில் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். அருளாளர்கள் உணர்வு கள் அனைத்தும் பாரதியின் பாடல்களில் அமைந்து இசைச் சுவையும் இலக்கியச் சுவையும் கொப்புளித்து நிற்கின்றன. அருளாளர்கள் இறைவனை எழுப்புகின்ற னர்; பாரதியோ பாரதமாதாவை எழுப்புகின்றார். முன் னைய இருவர் பாடல்களில் பக்தியுணர்வு தலைகாட் பாரதியின் பாடல்களில் நாட்டுப் பற்று தலைதுாக்கி நிற்கின்றது. தவிர, இவை யாவும் எண்சீர் விருத்தங்க ளிலே அமைந்திருப்பதுவும் கூர்ந்து நோக்கத்தக்கது. வள்ளற் பெருமானின் திருப்பள்ளி எழுச்சி அருட் பெருஞ்சோதி'யை எழுப்புவதாக அமைந்துள்ளது. இவ ரது பாடல்களும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பிலேயே அமைந்துள்ளன. ஆகவே, உணர்வுக ளும் அங்ங்னமே அமைந்துவிட்டன. நான்கு பாடல் களில் ஆழங்கால் படுவோம். பொழுது விடிந்தது.என் உள்ளமென் கமலம் 455 பொன்ஒளி பொங்கிய தெங்கும் தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாந் சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே முழுதும்ஆ னான்என ஆகம வேத முறைகள்ள லாம்மொழி கின்றமுன் னவனே எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி என்தந்தை யே.பள்ளி எழுந்தருள் வாயே (1) கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர்