பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 寧 3 簽 கட்டோடே களத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதிர் பட்டோடே பணியோடே திரிகின்றி தெருவில் பகியோடே வந்தாரைப் பார்க்கவும் நேர் கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டும்சேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றி பித்துல கிரே (1) அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர்.எனத் தெரியீர் பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் பலித்ததும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லிர் பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர் பின்படு தீமையின் முன்படு கின்றீர் இச்சையில் கண்மூடி எச்சுகம் கண்டீர் எத்துணை கொள்கின்றி பித்துல கிரே (5) வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றி வயிற்றுப் பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர் பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் எட்டிபோல் வாழ்கின்றி கொட்டிபோல் கிளைத்திர் எத்துணை கொள்கின்றி பித்துல கிரே (6) பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றி இங்கே புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால் செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில் சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர் கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றி கருணைஒன்றில்லர் எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கிரே (9)