பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 苓 3 2 5 案 அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன் உன்னைநினைந் துண்டேன்.என் உள்ளகத்தே வாழும் ஒருதலைமைப் பெருந்தலைவர் உடையஅருட் புகழாம் இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின் இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஒர் கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே (6) இதுவும் அகத்துறைப் பாடலே. இங்கும் அடிகள் - தலைவி தோழி - தலைவி, கருத்தொத்த பக்தை; அடிமலர்த்தேன் - இறையநுபவம்; இவ்வாறு கருதி பாட்டை அநுபவித்தால் நாமும் அடிகளாரின் அநுபவத் தைப் பெறலாம். கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் கணவர்திரு மேனியிலே கலந்தமனம் அதுதான் இற்பூத மனம்போலே மறைவதன்று கண்டாய் இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர் புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி - நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே (10) இதில் தலைவி (அடிகள்) தன் அநுபவத்தை (கற் பூர மணம்) தோழிக்கு, பக்தை ஒருத்திக்கு, தன்புணர்ச் சியை (இறைவனுடன் கலப்பை) எடுத்தோதி மகிழ்கின் றாள.