பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார் வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும் மனவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம் தான்பதித்த பொனடிைவம். தனைஅடைந்து களித்தேன் சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்உரைப் பதுவே (94) புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்தரு னந்தான் புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம் சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம் செய்ததரு னம்சுகத்தைச் செப்புவதெப் படியோ பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப் பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிாைங்சே மறப்புணர்ச்சி -ெத நான்.அதுவாய் அது என் மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே (98)