பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் தனித்தலைமைப் பெரும்பதினன் தந்தைவரு கின்ற தருணம்.இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் இனித்தநறும் கனிபோன்றே என்னுளம்தித் திக்க இன்னமுதம் அளித்தென்னை எழுலகும் போற்ற மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே கனித்தசிவா னந்தம்எனும் பெரும்போகம் தனிலே களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே (2) சத்தியவான் வார்த்தை.இது தான்உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை.இதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்.உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே (3) 举 331 崇