பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 举 337 家 பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே புகல்கின்றார் அதுகேட்டுப் புத்திமயக் கடையேல் மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கிரப்பாய் விரைந்தே தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆனை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே (9) இவற்றில் தலைவியே (அடிகளே) தன் கூற்றாக இறைவன் தம் மேல் வைத்துள்ள நேசத்தை அம்பலப் படுத்தி மகிழ்வதை அறியலாம். ஏனையவை யாவும் இம்மூன்று வழியாகவே நடைபெறுவதால் அவை விடப்பெற்றன. இவ்விடத்தில் வைணவ உரையாசிரியர்கள் அகப் பொருள் பாசுரங்களை தோழி பாசுரம்', 'தாய் பாசுரம்', 'மகள் பாசுரம் என வகைப்படுத்தி அவற்றிற்கு அற்புத மான தத்துவங்கள் உரைத்துள்ளமையை நினைவு கூர்ந்து மகிழ வேண்டும். 3. இசைப் பாடல்கள் இவ்வகையில் இத்திருமுறையில் முப்பத்தேழு பதி கங்கள் உள்ளன. இவை பல்வேறு வடிவங்களிலும் அமைந்து இசைக் கடலைக் கடக்க உதவுகின்றன. அவை சிவபதி விளக்கம் (62) தொடங்கி முரசறைதல் (124) ஈறாக அமைந்துள்ளன. இவற்றுள் பல சிந்து வகைப் பாடல்களே அதிகமாக உள்ளன. இவற்றை யெல்லாம் இசைஞானமுள்ளவர்கள் படித்து, பாடி, அநுபவிக்க வேண்டியவை. எடுத்துக்காட்டாக ஞான மருந்து (78) என்ற தலைப்பில் உள்ளது இராம. - 23