பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 娜 339 ※ என்று ‘பல்லவி”யில் தொடங்கி எட்டுக் கண்ணிகளில் முடிகின்றன. அவற்றுள், செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது - சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது இத்தா ரணிமுதல் வானும் உடுத்த இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம் (2) சாதி சமயம் சழக்லொம் அற்றது சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது - மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் (8) இவை இரண்டு கண்ணிகள். - - 110. அருட்காட்சி: இதுவும் 'சிந்துப் பாடலில் இயன்றது. நாலு பாடல்களால் முடிவது. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி மயில்குயில் ஆச்சுத டி அற்புதம் (1) (மயில் - விந்து; குயில் - நாதம்) துள்ளலை விட்டுத் தொடங்கினேன்:மன்றாடும் வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி வள்ளலைக் கண்டேன. டி. அற்புதம் (2) சாதி சமயச் சழக்கைவிட் டேன்.அருட் சோதியைக் கண்டேன டி - அக்கச்சி சோதியைக் கண்டேன டி அற்புதம் (3) பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி ஐயரைக் கண்டேன டி அற்புதம் (4) 119. விரைசேர் சடையாய் இதுவும் 'சிந்து'வில் அமைந்த நாலு பாடல்களைக் கொண்டது.