பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

裘 杜8 隶· இராமலிங்க அடிகள் இறைவன் நின்றருளிய தலம் இதுவேயாகும். இத் தலம்பற்றிய பதிகம் ஒன்று மூன்றாம் திருமுறையில் உள்ளது (16). அடுத்து வரும் திருவிளங்க' என்ற குறிப்புடைய பாடல் அடிகள் அருணகிரியில் வளர்ந்த சிவக்கொழுந்தாகிய அண்ணாமலையாரைப் போற்றிய தாகும். அருணகிரியில் திக்கொழுந்தாக வளர்ந்த இறை வனை, "அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே' எனப் போற்றுவது மிகப் பொருத்தமாகும். (பாடலை மூன்றாம் திருமுறையில் காண்க). (4) திருவதிகை. இதுவும் நடுநாட்டுத் தலமே. அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்று. 'அதிகை வீரட்டா னம்’ என்ற திருநாமத்தாலும் வழங்கும். திரிபுரத்தை எரித்த வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ள தலம். அப்ப ரும் அவர் தமக்கையார் திலகவதியாரும் சரியைத் தொண்டு செய்த தலம். அப்பரின் சூலை நோய் நீங்கிய தலமாகும். - - : - அடிகள் திருவதிகை சென்று வழிபட்டுப் பெரிய நாயகியைப் போற்றிய பாடல்கள் மூன்று கிடைத்துள் ளன. (மூன்றாம் திருமுறையில் 15ஆம் தலைப்பில் - பெரியநாயகியார் தோத்திரம் காண்க). அவற்றுள் ஒன்று கலிவிருத்த யாப்பில் அமைந்தது. அது இது: உரிய நாயகி யோங்கதி கைப்பதித் துரிய நாயகி தூயவிரட்டற்கே பிரிய நாயகி பேரருள் நாயகி பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம் (1) ஏனைய இரண்டு பாடல்களும் பன்னிருசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. 1. அடிகள் தனித்துறைதல்: 1862ஆம் ஆண்டில் அடிகள் சில காலம் நெல்லிக் குப்பத்திலும் தனித் துறைந்தார்கள். தலவழிபாடு தவிர பிற செயல்கட்காக