பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 崇 23 笨 (2) இன்னும் ஒருகால் காண்பேனோ ஒருகால் அல் லது பலகால் திருநடனம் கண்ட பெருமான் இன்னும் ஒருகால் காண்பேனோ என்று ஏக்கமுறுவாராய் (இரண் டாம் திருமுறை - 70 தரிசனப் பதிகம் பத்துப் பாடல்களி லும்) கூறுவர். பாடல்களை இத்திருமுறையில் காண்க. (3) சிறிது அறிந்தேன், முழுதும் அறிவேனோ: சிதம்ப ரத்தில் ஆனந்தர் சித்தர் திருநடத்தைச் சிறிது அறிந்தேன்; இன்னும் முழுதும் அறிவேனோ என்று ஏக்கமுறு வதைக் காணலாம். (-6 அத்துவித ஆனந்த அநுபவ இடையீடு - 10 பாடல்கள்) பாடல்களை இத்திருமுறை யில் காண்க. . . . . . - (4) அம்பலவாயிலில் அழுது நின்றது: ஒரு நாள் அடிகள் அம்பல வாயிலில் ஒரு புறத்தே நின்று திருவ ருளை நினைந்து அயர்ந்து அழுதார். அடிகளது அவல நிலையைப் பொறுக்கலாற்றாத அம்பலவாணன் அடி கள் முன் தோன்றி முகமலர்ந்து அருள்மொழி கூறித் தேற்றிய நிகழ்ச்சியை ஒரு பாடலில் (~ 6 இறை எளிமையை வியத்தல் - 10) பதிவு செய்கின்றார். (5) அம்பலத் திருக்காட்சி: அம்பலத்தில் ஒருநாள் ஆதித்தர் பன்னிருவர் ஒளியிலும். பேரொளியான இறைவனை அடிகள் காண்கின்றார்கள். தம் கண்கள் செய்த பெருந்தவத்தைப் பாராட்டி மகிழ்கின்றார்கள். (4 தனித் திருவிருத்தம் 42,43) (6) அம்பலவாணரிடம் பரிச வாசக தீட்சைகள் பெற் றமை: ஒரு சமயம் அருள் ஒழுகும் அம்பலவாணன் அடிகளாருக்கு இவ்விரு தீட்சைகளையும் செய்தருளல் (மேலது 44)