பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

第 24 紫 இராமலிங்க அடிகள் (7) சிலம்பொலி கேட்டல்: சிலம்பொலி கேட்டல் ஞானயோக அநுபவங்களுள் ஒன்று. சேரமான் பெரு மாள் நாயனார் இறைவனின் சிலம்பொலி கேட்டதைப் போலவும் (திருத்தில்லை) மணிவாசகப் பெருமான் சிலம்பொலி கேட்டதைப் போலவும் (வாதவூர்) அடிக ளும் சிலம்பொலி கேட்கின்றார். (-6 பிள்ளைப் பெரு விண்ணப்பம் - 12) (8) நால்வர் பெருமக்கள் மீதும் அருள் மாலைகள் பாடியதுபவித்தவர் (ஐந்தாம் திருமுறை) (9) அடிகள் நால்வர் பெருமக்களையடுத்து திருஐந் தெழுத்தில் பற்று மிக்கவர் என்பது தெளிவு. பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் கண்கள் நன்றிமைப் பதுமறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. - 2 நமச்சிவாய சங்கீர்த்தன லகிரி - 7 நான்செய்த புண்ணியம் யாதோ சிவாய நமவெனவே - ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்.எனை ஒப்பவரார். - 1. திருவருள் முறையீடு - 90 என்பவை இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. (10) திருமுறைகளால் அருள்பெற்றது: