பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 26 梁 இராமலிங்க அடிகள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்ள வேண்டும். ஏழைகளின் பசி தீர்த்தலாகிய சீவகாருண் யமே பேரின்ப வீட்டின் திறவுகோல். புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மைகளைத் தெரிவிக்க மாட்டா. இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது. கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டா - இவை கொள்கைகள். 7. கூடலூர் (கடலூர்) தனித்துறைதல்: இக்காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பல. அவற்றை ஈண்டுக் குறிப் போம். (1) சித்தர் ஒருவர் அடிகளைக் கண்டு இலட்டு ஒன்று தந்து மறைந்தார். அந்த இலட்டை அனைவர்க் கும் விநியோகித்து சித்தர் ஒருவர் வந்து போனார். இந்நேரம் அவர் காசியிலிருப்பார். அவர் கொடுத்த இலட்டுதான் இது என்றார் அடிகள். (2) அப்பாசாமி செட்டியார் வாழைத் தோட்டத்தில் வாழை இலையிலிருந்த பாம்பு தீண்டியது. தீண்டிய இடத்தில் குருதி கசிந்தது. அவ்விடத்தில் திருநீற்றைப் பூசினார் அடிகள். தீண்டிய பாம்பு மரித்தது. அமுதுண் டும் சாவர் தேவர்கள். நஞ்சுண்டும் சாகார் ஞானிகள். அடிகள் சாதாரண மனிதர் அல்லர். இன்னும் பல உள; விரிவஞ்சி அவை காட்டப் பெறவில்லை. 3. கருங்குழியில் நிகழ்ந்த அற்புதங்கள் சில காட்டு வேன். (1) நீரால் விளக்கெரித்தது. இரவில் விளக்கில்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்பது அடிகள் கொள்கை. 11. இராமலிங்க அடிகள் திருவரலாறு (ஊரன் அடிகள் எழுதியது காண்க.)