பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籌 28 蓉 இராமலிங்க அடிகள் அளித்தருளினார். இது 'பிரசாத மாலை (நான்காம் திருமுறை)யில் பாடல்தோறும் பத்துப் பாடல்களிலும் குறித்துள்ளார். 9. உருவ வழிபாட்டைப் பற்றி: இதுபற்றி பிரம்ம சமாஜத்தாருடன் வாதம் 16.1.1867இல் நடைபெற்றது. அடிகளும் அதில் கலந்து கொண்டார். உருவ வழிபாடு அறவே கூடாதென்பார் பிரமசமாஜத்தார் (இராஜாராம் மோகன்ராய்). அந்த வழிபாடு வேண்டியதே என்பர் வள்ளற் பெருமான். உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அவ்வப் பக்குவர்க்கு உரியவை; உருவ வழிபாடு முதற்படி: அருவ வழிபாடு முடிவான படி, அருவ வழிபாடு எல்லாராலும் செய்ய இயலாது; அதற்குப் பெரும் பக்குவம் வேண்டும். உருவ வழிபாடு எல்லாராலும் செய்ய இயலும். உருவ வழிபாட்டிலிருந்தே அருவ வழிபாட்டுக்குரிய பக்குவத்தைப் பெறுதல் சாமானி யர்க்குரிய சாதன முறை. ஆதலால் உருவ வழிபாடு இகழ்ச்சிக்குரியதன்று என்பது அடிகளாரின் கொள்கை. சாதாரண தரத்தவர்கள் செய்ய வேண்டிய தியானத் தைப்பற்றி உபதேசிக்கும்போது, 'தியானம் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஒர் உருவத்தைத் தியானிக்க வேண்டும். நிஷ்களமாக இருக்கப்படாது; உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின் உருவம் கரைந்து அருவமாகும்’ என அடிகள் உபதேசிக்கின்றனர். 10. திருவருட்பா முதற் பதிப்பு வெளியீடு (பிப்பிரவரி - 1867): முதல் நான்கு திருமுறைகளே அடங்கியவை இப்பதிப்பில். பெயரை 'இராமலிங்க சுவாமிகள் என்று வழங்கக் கூடாது என்று அடிகள் தடுத்துவிட்டனராத