பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缘 38 篆 இராமலிங்க அடிகள் யைக் கடைப்பிடிக்க அவர்கள் முன்னையிலும் செல்வச் செழிப்பில் செழித்து விளங்கினர். (iii பொன் விளைவு: பொன் செயல்வகை (Alchemy)யைத் தனக்கு இறைவன் உணர்த்தியதாக ஒரு பாடலில் குறிப் பிடுவர். (6 இறை திருக்காட்சி - 9) ... " (14) அடிகட்கு ஆட்பட்ட வேட்டவலம் பெருநி லக்கிழார் ஒருவர் தமது நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயி லில் உயிர்பலி இடுவதை நிறுத்தி பொங்கல் செய்து படைக்கும் வழக்கத்தை நடைபெறச் செய்தார். (15) ஆறுமுக நாவலர் வழக்கு: யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்க்கும் வள்ளல் பெருமானுக்கும் அ ருட்பா - மருட்பா வாதம் நடைபெற்றது. அருட்பா தொகுதிக்கு 'இராமலிங்கம் பிள்ளை பாடல் திரட்டு’ என்று வழங்க வேண்டுமேயன்றி 'திருவருட்பா என்று வழங்கக் கூடாது என்பது அவருடைய வாதம். பழுத்த சைவராகிய ஆறுமுக நாவலருக்கு வள்ளற் பெருமா னின் சமரச சன்மார்க்கக் கொள்கைகள் உடன்பா டில்லை. புறச் சமயத்தார்க்கு (முக்கியமாகக்) கிறித்தவர் கட்கு இடம் கொடுப்பதாக உள்ளன என்று கருதினார். பொய் வழக்கு போட்டுத் தோற்றார். இது மிகவும் வருந்தத்தக்க செயல். (15) பசிப் பிணி மருத்துவராகத் திகழ்ந்த அடிகள் உடற்பிணி மருத்துவராகவும் திகழ்ந்தார். வள்ளல் பெரு மான் வைத்தியம், வாதம், யோகம் ஆகிய மூன்றிலும் வல்லவர். கருங்குழியில் உறைந்த காலத்திலும் வடலூ ரில் வாழ்ந்த காலத்திலும் பலருக்கு மருந்தளித்து (சித்த மருத்துவமுறையில்) நோய் தீர்த்தனர். (16) திருக்குறள் வகுப்பு நடைபெறச் செய்தல்: வட லூரில் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு