பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 缘 39 梁 திருக்குறள் வகுப்பு நடைபெறச் செய்தார். பொது மக்களுக்காக முதன் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தத் தொடங்கியவர் வள்ளல் பெருமானேயாவர். தமது பாடல்களில் குறட்பாக்கள், சொற்றொடர்கள், குறட் கருத்துகள் ஆகியவற்றை ஆண்டுள்ளார். 5. சித்தி வளாகப் பகுதி (1870 - 1874): அடிகளா ரின் அகவை (47-51): மேட்டுக்குப்பத்தில் அடிகள் உறைந்த இடம் சித்தி வளாகம். சித்தி வளாகம் என்பது அடிகள் இட்ட பெயர். இப்பெயர் அருமையும் ஆழ்ந்த பொருளும் உடையது. சித்தி - வீடு பேறு; வளாகம் - இடம். சித்தி வளாகம் - சித்தியை நல்கும் இடம், வீடு பேற்றை அளிக்கும் இடம். (1) முத்தியும் சித்தியும்; சமயவாதிகள் முத்தியே முடிவான பேறு என்பர். முத்தி என்பது அடைய வேண்டிய நிலைக்கு முன் உறும் சாதனம் என்றும், சித்தி என்பது அந்நிலையைச் சேர்ந்து அநுபவிக்கும் அநுபவம் என்றும் கூறுவர். முத்தினன் பதுநிலை முன்னுறு சாதனம் அத்தக வென்றஎன் அருட்பெருஞ் சோதி சித்தினன் பதுநிலை சேர்ந்த அநுபவம் அத்திறம் என்ற அருட்பெருஞ் சோதி, - அருட்பெருஞ்சோதி அகவல் 249-252 என்று கூறியிருப்பது ஈண்டு அறியப்படும். முத்தி - பாசவிடு, பாச நீக்கம் ஆகிய நிலை முன்உறுசாதனம்; சித்தி - சிவப்பேறு, வீடு பேறு ஆகிய நிலை சேர்ந்த அநுபவம். சிவப்பேறாகிய சித்தியைப் பெறும் இடமே சித்தி வளாகம். - (2) பிரம்ம தண்டி யோகம்: சித்தி வளாகத்தில் அடி கள் தமது திருவறையில் திச்சட்டிகளுக்கு முன் அமர்ந்து