பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 等 41 器 னாது "சபை" என்றதும் தனிச்சிறப்பு. சபையின் முழுப் பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை' என்பது. இறைவனது திருக்குறிப்பின்படியே சத்திய ஞான சபையை அடிகள் அமைத்தனர். - (6) சபை வழிபாட்டு முறை. இம்முறை முற்றிலும் புதுமையானது. கோயில் வழிபாட்டு முறைகளின் பேறானது வழிபாட்டுக்குக் கூடுவோர் அனைவரும் சபைக்குப் புறத்தே வாயிலருகில் நின்று மெல்லெனத் துதிடத்தல் வேண்டும். புலாலுண் போராகிய புறவினத் தார் சபைக்குப் புறத்தே நின்று வழிபட வேண்டும். சிற்சபை பொற்சபையுள்ள முன்மண்டபத்தில் அவர் கள் புகலாகாது. இதுவே சபைக்குரிய வழிபாடு. இது தவிர வேறு எதுவும் கூடாது. சபையினுள் யாரும் புகலாகாது. சபையினுள் உள்ள அகண்டத்திற்குத் திரி முதலியன இடுதற்காகவும், சபையின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்துவதற்கும் மூவாசைகளில் பற்றில்லாத வராயும் உள்ள ஒருவர் வேண்டும்போது சபையினுள் புகலாம். அங்ங்னம் உட்புகுதற்கும் புறத்தே இருந்து வழிபடுதற்கும் சாதி முதலிய வேறுபாடு இல்லை. இசைக் கருவிகள், பிரசாத வகைகள், தீப தூட ஆரா தனைகள் திருநீறு முதலிய பிரசாதங்கள் இவ்வாறு சமயக் கோயில்களில் அனுட்டிக்கப் பெறுபவை யாவும் ஞானசபை வழிபாட்டிற்குப் புறம்பானவை. (7) சன்மார்க்க விண்ணப்பங்கள்: அடிகள் அருட் பெருஞ்சோதி ஆண்டவரிடத்துச் செய்து கொண்ட உரைநடை விண்ணப்பங்கள் நான்கு. அவை: ( சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம். ii) சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப் பம்.