பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

禽 44 寧 இராமலிங்க அடிகள் (1) திருவுருவம்: மெலிந்த செந்நிற உடல், நடுத்தர உயரம், நிமிர்ந்த தோற்றம், அழகிய திருமுகம், நீண்ட, மெல்லிய கூரிய அழகிய மூக்கு, ஒளிவீசும் பரந்த கண்கள், கருணை ததும்பும் பார்வை - இவையே அடிகளின் திருவுருவம். (2) உடை வெள்ளாடைத் துறவி. கல்லாடை உடுத்தில்லை மெய்யுறக்காட்ட வெருவி வெண்துசி லால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்’ (பிள்ளைப் பெருவிண்ணப்பம் - 52) என்பது அகச்சான்று. (3) உணவு: இளமை முதல் அடிகள் உணவில் வெறுப்புடையவர். சிலகாலம் நாளும் ஒரு வேளையே உண்டனர்; சில காலம் இருவேளை உண்டனர். (4 புறமொழிக் கிரங்கல் - 2, 6 அநுபவமாலை - 6,30 என்பவை அகச்சான்றுகள்). சோற்றிலே ஒருவனுக்கு விருப்பம் உண்டானால் அவனுடைய தவம் ஆற்றிலே கரைத்த புளிபோலாகும் (6 அவா அறுத்தல் - 2) காண்க. - - - (4) உறக்கம்: இரவு 15 நாளிகை முதல் 22 1/2 நாழிகை வரை (3 மணி நேரம்) சித்தி வளாகத்தில் செய்த உபதேசத்தில் தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் நீடிக்கும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை (ஒரு மணி நேரம்) உறங்கப் பழகுவானானால் அவன் ஆயிரம் ஆண்டு வாழ்வான்’ என அருளியுள்ளார்கள். (5) பழக்க வழக்கங்கள். சிலவற்றைக் காண்போம். ( முக்காடு: இடையில் உடுத்தும் ஆடையை முழங் கால் மறையும் அளவிற்கே உடுத்துவார். மேலா டையை உடல் முழுதும் போர்த்தியிருப்பர். தலையைச் சுற்றி முக்காடாக அணிந்திருப்பர் (6 - பிள்ளைப் பெருவிண்ணப்பம் - 52)