பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அருளிச் செயல்கள் திருஅருட்பாவில் திருமுறை என்பது அதன் பகுதியின் பெயராக அமைக்கப் பெற்றுள்ளது. திருமு றைகளும் அவற்றின் பகுதிகளும் அவை பாடப் பெற்ற வரிசையில் - வரலாற்று முறையில் - வகுக்கப் பெற்று அடைவுபடுத்தப் பெறவில்லை. பொருளமைதி கருதி யும் வகுக்கப் பெற்றிருப்பதற்காகச் சொல்வதற்கில்லை. திருமுறைகளின் தொகை ஆறு என உள்ளத்தில் அமைத் துக் கொண்டு திருமுறைகள் வகுக்கப் பெற்றதாக அறி யக் கிடக்கின்றது." இன்று பெரு வழக்காகக் கிடைக்கும் திருஅருட்பா (சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர் - 607 203)வில உள்ளபடி அமைப்பு வருமாறு: திருமுறை பதிகம் பாடல் முதல் 52 570 இரண்டாம் 103 1388 மூன்றாம் 27 61.2 நான்காம் 41 458 ஐந்தாம் 12 238 ஆறாம் 144 255.2 1. திரு ஐந்தெழுத்தோடு ஓங்காரத்தைச் சேர்க்க 'ஓம் சிவாய நம' என ஓங்காரப் பஞ்சாக்கரத்தின் எழுத்து ஆறாகும். சமயங்கள் ஆறு. அத்துவா ஆறு. இவற்றை உட்கொண்டு திருமுறைகள் ஆறு என வகுத்தார் வேலாயுதனார் (அடிகளின் மாணாக்கர்)