பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 岑,4了 案 இறைவன் திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஒழுகும் பெரியோரது வாழ்க்கை முறை மன நிறைவினைத் தரும் சிறப்புடையது. ஆகவே, அத னைத் திருநெறி என வழங்குவர் ஆன்றோர். இத்தகைய திருநெறியினை வகுத்தருளிய சான்றோர் திருமூலர், காரைக்கால் அம்மையார், சமகுரவர் நால்வர் முதலி யோர். இவர்களைத் தவிர பிற்காலத்து தாயுமான அடிகள், இராமலிங்க அடிகள் முதலியோர். இவர்கள் திருவாய் மலர்ந்தருளிய தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள் திருநெறி யத் தமிழ் திருமுறை எனவும் வழங்கப்பெறும். சைவத் திருமுறை பன்னிரண்டு என்பதை நாம் அறிவோம். இந்த மரபினையொட்டியே அடிகளார் பாடல்கள் திருஅருட்பா என வழங்கப்பெற்றது. திரு - தெய்வத் தன்மையுடைய, அருள் - அருளால் பாடப் பெற்ற, பா - பாக்கள் எனப் பொருள்படும். திரு என்பது அழகு, செல்வம், திருமகள், மேன்மை, சிறப்பு, நல்வினை, தெய்வத் தன்மை எனப் பொருள்தரும் பல பொருள்களையுடையது. ஈண்டு தெய்வத்தன்மை என்பதே பொருந்துவதாகின்றது. அருள் நூல்களைத் திரு என்னும் அடைமொழியைச் சார்த்தி வழங்குதல் தமிழ் மரபு. திருக்குறள், திருமந்தி ரம், திருவாசகம், திருக்கோவையார், திருவாய் மொழி என்று வருவது காணத்தகும். - - - - - , , 'திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தவிற் றாயதோர் உள்ள நிகழ்ச்சி' என்பர் பேராசிரியர்." எனவே, இன்பம் வரினும் துன்பம் வரினும் இரண்டை யும் ஒப்பக் கருதும் மனச் செம்மையே திரு என்னும் 2. தொல்,பொருள்.மெய்ப், பிறப்பே குடிமை என்ற நூற்பு உரை